< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தனியார் வாகனங்களில் அரசு முத்திரை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
|26 Sept 2023 6:52 PM IST
விதிகளை மீறி தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனு தொடர்பான விசாரணையின் போது தமிழக அரசு இதனை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை என்பதால், இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்படி அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.