< Back
மாநில செய்திகள்
சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
மாநில செய்திகள்

சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
9 Sept 2022 4:46 AM IST

சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை,

சாலை ஓரங்களில் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணாமலையார் கோவில் பகுதிகளில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். கோவில் மதில் சுவரை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கிரிவல பாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டு வருவதாக குறிப்பிட்ட கலெக்டர், ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்