< Back
மாநில செய்திகள்
`அரபிக் கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அடுத்து என்ன நடக்கும்?
மாநில செய்திகள்

`அரபிக் கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அடுத்து என்ன நடக்கும்?

தினத்தந்தி
|
15 Dec 2022 9:50 AM IST

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென் கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளிமண்டல சுழற்சி உருவானது. இது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடலோர பகுதிகளை நெருங்கும் வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்