< Back
மாநில செய்திகள்
ஊராட்சிகளில் தெரு விளக்குகள் செல்போன் மூலம் செயல்படுத்தப்படும்-ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ஊராட்சிகளில் தெரு விளக்குகள் செல்போன் மூலம் செயல்படுத்தப்படும்-ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
7 Dec 2022 12:12 AM IST

கிராம ஊராட்சிகளில் தெரு விளக்குகள் அனைத்தும் செல்போன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது என்று ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

கிராம ஊராட்சிகளில் தெரு விளக்குகள் அனைத்தும் செல்போன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது என்று ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் கிராம ஊராட்சி வளர்ச்சி மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, முதுகுளத்தூர், மண்டபம் யூனியன்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்து வடிவமைக்கப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர் பேசியதாவது:-

கிராம ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தெரு விளக்குகளை அலைபேசி மூலம் செயல்படுத்தும் முறை அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளன. 2023-24-க்கான கிராம வளர்ச்சி திட்டம் தயார்செய்யும் போது தண்ணீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் பயன்பாடற்ற மின் இணைப்புகளை அகற்ற வேண்டும். சுகாதாரத்துறை மூலம் அவ்வப்போது மருத்துவ முகாம் நடத்த வேண்டும். பொதுவாக ஊராட்சியின் வளர்ச்சிக்கு திட்டமிட்டு செயல்பட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊராட்சி தலைவர்களின் பணி முக்கியமான இருக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், பயிற்சி உதவி கலெக்டர் நாராயண சர்மா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், ஊராட்சி உதவி இயக்குனர் பரமசிவம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்