< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
தெருமுனை பிரசாரம்
|4 Sept 2023 11:42 PM IST
தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
மத்திய அரசுக்கு எதிராகவும், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 7-ந்தேதி மறியல் போராட்டம் நடக்கிறது. இதனை விளக்கி தெருமுனை பிரசாரம் நேற்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்டக்குழு ஹோச்சுமின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.