< Back
மாநில செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம்
கரூர்
மாநில செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம்

தினத்தந்தி
|
2 Sept 2023 11:52 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது.

விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் குளித்தலையில் வருகிற 7-ந்தேதி போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டதை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குளித்தலை ஒன்றிய குழு சார்பில் நெய்தலூர் காலனி, நங்கவரம், குறிச்சி ஆகிய பகுதிகளில் தெருமுனை பிரசாரம் நடந்தது. இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்