அரியலூர்
மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம்
|மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை, பஸ் நிலையம், பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், நான்கு ரோடு, காந்தி பூங்கா பஸ் நிறுத்தம் மற்றும் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி அந்த கட்சியினர் ஜெயங்கொண்டம் அண்ணா சிலையில் இருந்து கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு மணிவேல், மாவட்ட குழு பத்மாவதி, துரைராஜ், ரவீந்திரன், கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினர். மேலும் அதானி கார்ப்பரேட் குடும்பத்தின் மாபெரும் மோசடிக்கு பின்னால் உள்ளதாக மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசின் பட்ஜெட் உழைப்பாளர்களுக்கு எதிராக உள்ளதாகவும், உணவு மானியம் மற்றும் உழவு மானியத்தை ரத்து செய்ததற்கு எதிராகவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் இந்த பிரசாரம் நடைபெற்றது.