< Back
மாநில செய்திகள்
தெருநாய்கள் கருத்தடை மையம் மூடல்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தெருநாய்கள் கருத்தடை மையம் மூடல்

தினத்தந்தி
|
13 Oct 2023 12:30 AM IST

ஒண்டிப்புதூரில் தெருநாய்கள் கருத்தடை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஒண்டிப்புதூர்


கோவை மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சீரநாயக்கன் பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் ஆகிய இடங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கு தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒண்டிப்புதூர் மையத்தில் சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் போதிய சுகாதாரமின்றி இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த கருத்தடை மையம் மூடப்பட்டு உள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியதாவது:- ஒண்டிப்புதூரில் உள்ள கருத்தடை மையத்தில் விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டது. அதில் கருத்தடை மையம் சுகாதாரமின்றி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அந்த கருத்தடை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அங்கு சுகாதாரத்தை உறுதி செய்த பிறகே அந்த மையம் மீண்டும் செயல்படும். வெள்ளலூரில் புதிதாக தெருநாய் கருத்தடை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்