< Back
மாநில செய்திகள்
நடிகர் ரஞ்சித் மீது விசிக புகார்
மாநில செய்திகள்

நடிகர் ரஞ்சித் மீது விசிக புகார்

தினத்தந்தி
|
12 Aug 2024 4:22 PM IST

ஆணவக்கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் ரஞ்சித் மீது போலீசில் விசிக புகார் அளித்துள்ளது.

சென்னை,

ஆணவக்கொலை குறித்து நடிகரும் கவுண்டம்பாளையம் படத்தின் இயக்குனருமன ரஞ்சித் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் சூடான விவாதத்தை கிளப்பி இருக்கிறது. ஆணவக் கொலை தவறு இல்லை என்ற ரீதியில், பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையினால் வரும் கோவம் தான் அது, அது வன்முறை அல்ல என நேற்று முன்தினம் அவர் பேசி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இதற்கிடையே, ஆணவக் கொலையை குற்றமல்ல, அக்கறை என்று ரஞ்சித் பேசியது, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது என்றும், இதுபோன்ற கருத்துக்களை பரப்புவது கவலை அளிக்கிறது என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆணவக்கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் ரஞ்சித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக புகார் அளித்துள்ளது. ஆணவக்கொலையை நியாயப்படுத்தும் வகையில் ரஞ்சித் பேசியதாகவும், சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் ரஞ்சித் பேசி வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்