< Back
மாநில செய்திகள்
எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்

தினத்தந்தி
|
18 Jun 2023 1:07 AM IST

களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம் நடைபெற்றது.

களக்காடு:

களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடந்தது. நகர தலைவர் கமாலுதீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கபீர் வரவேற்று பேசினார். இணை செயலாளர் ரபிக், செயற்குழு உறுப்பினர் ஆரிப் பைஜீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் களக்காடு புதிய பஸ் நிலைய பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். வருகிற 21-ந் தேதி கட்சியின் தொடக்க தினத்தை முன்னிட்டு கொடியேற்றி, நலிவடைந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்க வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், நகர செயலாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்