< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்பு: மெட்ரோவுக்கு ரூ.210 கோடி சேதம் கணக்கீடு
|13 Dec 2023 8:05 PM IST
சென்னை மெட்ரோ நிறுவனம் சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 3, 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ,மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்புகளால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட திட்டத்தில் ரூ.15 கோடியும், 2ம் கட்ட திட்டத்தில் ரூ.195 கோடியும் சேத மதிப்பாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ நிறுவனம் சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.