< Back
மாநில செய்திகள்
கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்: கி.வீரமணி கண்டனம்
மாநில செய்திகள்

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்: கி.வீரமணி கண்டனம்

தினத்தந்தி
|
30 April 2023 12:35 AM IST

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலத்தில் சிவமோகா மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலை, ஊழல் புகார் கூறப்பட்டு பதவி விலகிய கர்நாடகா முன்னாள் மந்திரி ஈஸ்வரப்பா மற்றும் சிலர் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து மேடையில் ஒலிபரப்பப்பட்டது. அதை ஈஸ்வரப்பா தடுத்து, கர்நாடக தாய்மொழி வணக்கம் பாடும்படிக் கூறி தமிழ் வணக்கப்பாட்டை நிறுத்திவிட்டார்.

பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை மேடையில் மவுனமாக இருந்துள்ளார். ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் வணக்கப் பாட்டுத் தவறுதலாக முதலில் போடப்பட்டதாக வைத்துக்கொண்டாலும், அது முடியும்வரை காத்திருந்து பிறகு அதைச் சுட்டிக்காட்டி, கன்னடப் பாட்டு ஒலிபரப்பப்பட்டிருக்க வேண்டும். அது தான் நாகரிகம். தமிழ் மொழியை அவமானப்படுத்தி, அங்கு வாழும் தமிழ் வாக்காளர்களின் வாக்குகளை அள்ளிட நினைத்தால், தமிழர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா? இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்