< Back
மாநில செய்திகள்
திருவாரூரில் ஒ.என்.ஜி.சி. கிணறு அமைக்கும் பணி நிறுத்தம் - கலெக்டர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை
மாநில செய்திகள்

திருவாரூரில் ஒ.என்.ஜி.சி. கிணறு அமைக்கும் பணி நிறுத்தம் - கலெக்டர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை

தினத்தந்தி
|
3 Aug 2022 6:37 PM IST

கிணறு அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த ஒ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்கு கலெக்டர் காயத்ரி உத்தரவிட்டார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்களம் பகுதியில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய எண்ணெய் கிணறு அமைப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட கலெக்டர் காயத்ரியிடம் மனு அளித்தனர். இதையடுத்து உடனடியாக பணிகளை நிறுத்த ஒ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்கு கலெக்டர் காயத்ரி உத்தரவிட்டார்.

இதனை மீறி அடியக்கமங்களம் பகுதியில் புதிய எண்ணெய் கிணறு தோண்டும் பணி நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, கலெக்டர் காயத்ரியின் உத்தரவுப்படி அந்த பகுதிக்குச் சென்ற கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் வட்டாட்சியர் நக்கீரன் ஆகியோர் எண்ணெய் கிணறு தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.

மேலும் செய்திகள்