< Back
மாநில செய்திகள்
தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

தினத்தந்தி
|
4 July 2023 3:24 PM IST

அரசு தரப்பில் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு கல்குவாரி கிரசர், எம்.சாண்ட் உரிமையாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், கடந்த ஜூன் 27-ந்தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள 2 ஆயிரம் கல்குவாரிகள், 5 ஆயிரம் கிரசர் மற்றும் டிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கிரசர் ஜல்லி மற்றும் கல்குவாரி உரிமையாளர்களிடம் அரசு தரப்பில் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்