< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
|30 July 2023 12:15 AM IST
சிதம்பரம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அண்ணாமலை நகர்,
மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை மயிலாடுதுறை அருகே ராமாபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 52) என்பவர் ஓட்டினார். சிதம்பரம் அருகே வேளக்குடி பழைய கொள்ளிடம் பாலத்தில் சென்றபோது, மர்மநபர்கள் திடீரென அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இருப்பினும் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.