< Back
மாநில செய்திகள்

கடலூர்
மாநில செய்திகள்
அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

14 July 2023 12:15 AM IST
சிதம்பரம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு,
சிதம்பரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கூடலையாத்தூர் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சை ஒரத்தூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டினார். இரவு 9 மணி அளவில் சிதம்பரம் அருகே வடஹரிராஜபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பஸ்சின் பின்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் சிலர் கல்வீசி உடைத்தனர். உடனே டிரைவர் மணிகண்டன் பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்தவர்கள் யார்? எதற்காக வீசினார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.