< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
லாரியில் கடத்திய கிரானைட் கல் பறிமுதல்
|2 Jun 2023 12:30 AM IST
பர்கூர்:
கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு உதவி இயக்குனர் பொன்னுமணி தலைமையில் அதிகாரிகள் அச்சமங்கலம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது அதில் 35 டன் எடை கொண்ட ஒரு ராட்சத கிரானைட் கல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.