< Back
மாநில செய்திகள்
புதுச்சேரியில் திருடப்பட்ட கார் பண்ருட்டியில் பறிமுதல் - திருடிய காரில் நாட்டு வெடிகள் கடத்தல்
மாநில செய்திகள்

புதுச்சேரியில் திருடப்பட்ட கார் பண்ருட்டியில் பறிமுதல் - திருடிய காரில் நாட்டு வெடிகள் கடத்தல்

தினத்தந்தி
|
15 Oct 2023 9:13 PM IST

புதுச்சேரியில் திருடப்பட்ட காரை கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவு எண் இன்றி வேகமாக வந்த காரை மறித்து சோதனை செய்ததில் நாட்டு வெடிப்பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட புதுச்சேரியைச் சேர்ந்த வால்முனி என்ற நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் புதுச்சேரியில் இருந்து காரைக்கடத்தி அதில் வெடிபொருட்களை எடுத்து வந்து பண்ருட்டியில் உள்ள வியாபாரிடம் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்