< Back
மாநில செய்திகள்
திருச்சியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

தினத்தந்தி
|
22 Jun 2022 1:14 AM IST

திருச்சியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,ஜூன்.22-

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தலைமை ஏற்க வாருங்கள் என கூறி சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி ரெயில் நிலையம் அருகே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டியில் அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட கழகத்தின் ஒற்றை தலைமையே, கழகத்தை வழிநடத்த வாருங்கள் என ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கு போட்டியாக அவர்கள் ஒட்டிய சுவரொட்டியின் மிக அருகில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டியில் 4 வருடம் சிறப்பான ஆட்சியை கொடுத்து சாமானிய மக்களிடம் எளிமையான முதல்-அமைச்சர் என பெயரெடுத்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அன்போடு அரவணைத்து கட்சியை கட்டுப்பாட்டோடு வழிநடத்தும் எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகளால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்