< Back
மாநில செய்திகள்
காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
மதுரை
மாநில செய்திகள்

காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

தினத்தந்தி
|
3 Jun 2022 2:18 AM IST

மதுரை விமான நிலைய சாலையில் காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை,

மதுரை அவனியாபுரம் அருகே உள்ளது வள்ளனந்தபுரம். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டார்கள்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

அதன்படி, அவர்கள் நேற்று காலை அவனியாபுரம்- விமான நிலைய சாலையில் ஒன்று திரண்டு திடீரென காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்புடன், பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்