< Back
மாநில செய்திகள்
நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு உதவித்தொகை
விருதுநகர்
மாநில செய்திகள்

நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு உதவித்தொகை

தினத்தந்தி
|
17 Oct 2023 1:56 AM IST

நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு உதவித்தொகை கேட்டு மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட நலிந்த கிராமிய கலைஞர் நல சங்க தலைவர் முருகேசன் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் கவுண்டம்பட்டியை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் சுப்பையா, எரிச்சநத்தத்தை சேர்ந்த தவில் கலைஞர் கருப்பையா, வெள்ள பொட்டலை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் கருப்பன் ஆகியோருக்கு இயல், இசை, நாடக மன்றம் மூலம் நலிந்த கிராமிய கலைஞர்களுக்கான உதவித்தொகை வழங்க மாவட்ட நிர்வாகமும், நெல்லை கலை பண்பாட்டு உதவி இயக்குனரும் பரிந்துரை செய்தும் கடந்த 2 வருடங்களாக அவர்களுக்கு நலிந்த கிராமிய கலைஞர்களுக்கான உதவி தொகை கிடைக்காத நிலை உள்ளது. எனவே வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் இவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்