திருவாரூர்
படித்துறை சீரமைப்பு
|கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த படித்துறையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த படித்துறையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தனூர் கிராமம்
கூத்தாநல்லூர் அருகே பழையனூரில் சாத்தனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி உள்ள வெண்ணாற்றின் கரையோரத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறை கட்டப்பட்டது. இந்த படித்துறையை சாத்தனூர், பழையனூர், காக்கையாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், சாத்தனூர் சிவன்கோவில், பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில் போன்ற கோவில்களுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
சீரமைத்து தர வேண்டும்
கடந்த சில ஆண்டுகளாக படித்துறையின் தடுப்புச்சுவர் மற்றும் படிக்கட்டுகளில் சில உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால் படிக்கட்டுகளில் இறங்குபவர்கள் சிலர் ஆற்றுக்குள் விழுந்து காயம் அடைந்தனர்.
இரவு நேரங்களில் படிக்கட்டுகளில் தட்டு தடுமாறி இறங்குகின்றனர். இதனால் சேதமடைந்த படித்துறையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் உள்ளது.
எனவே சேதமடைந்த படித்துறையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.