< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'சந்திரயான்-3' வெற்றியை பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உறுதி
|1 Sept 2023 4:19 PM IST
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி என்பது நமது நாட்டின் பெருமை என்று அமைச்சர் அன்பில்மகேஷ் கூறினார்.
சென்னை,
'சந்திரயான்-3' வெற்றியை பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி என்பது நமது நாட்டின் பெருமை என்றும், இந்த திட்டத்தில் பணியாற்றியவர்கள் நமது அரசு பள்ளிகளில் படித்தவர்கள் என்பது கூடுதல் பெருமை என்றும் கூறினார்.
'சந்திரயான்-3' திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.