விருதுநகர்
இருக்கன்குடி கோவில், பிளவக்கல் அணை பகுதியை மேம்படுத்த நடவடிக்கை
|விருதுநகர் மாவட்டத்தில் இருக்கன்குடி கோவில், பிளவக்கல்அணை பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநாட்டில் கலெக்டர் ெஜயசீலன் வலியுறுத்தி உள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கன்குடி கோவில், பிளவக்கல்அணை பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநாட்டில் கலெக்டர் ெஜயசீலன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது அமைதிைய கெடுக்க அனுமதிக்க கூடாது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
சென்னை மாநாட்டில் கலந்து கொண்டு விருதுநகர் திரும்பிய மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் "தினத்தந்தி"க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் செய்யப்பட வேண்டிய மேம்பாடு பணிகள் குறித்து மாநாடு முடிந்த பிறகு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டதுஅதன்படி நான் பல்வேறு மேம்பாட்டு பணிகள் குறித்து வலியுறுத்தி உள்னேன்.
இருக்கன்குடி கோவில் பகுதி மற்றும் பிளவக்கல் அணை பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர்களை சீரமைக்க வேண்டும் என கூறினேன். இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு மதிப்பீடு தயாரித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் கிராம பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட மக்களின் கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்து அதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
பல்வேறு துறைகளைகளையும், அலுவலர்களையும் ஒருங்கிணைத்து திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து திட்டப்பணிகளையும் அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தரமாக, முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.