< Back
மாநில செய்திகள்
மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மநீம
மாநில செய்திகள்

மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மநீம

தினத்தந்தி
|
11 Nov 2022 7:18 PM IST

மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

சென்னை,

மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கல். மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த தம்பதி உள்ளிட்ட 3 தமிழர்களும் இவ்விபத்தில் இறந்துள்ளது மிகுந்த வருத்தத்திற்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், மரணமடைந்த 3 தமிழர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளது.

மேலும் செய்திகள்