< Back
மாநில செய்திகள்
காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

"காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினத்தந்தி
|
3 Sept 2023 3:40 PM IST

காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

சைதாப்பேட்டையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

ஏற்கனவே காலியாக உள்ள 1021 மருத்துவ காலி பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் மேலும் ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனையும் எம்.ஆர்.பி. மூலம் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 208 மருத்துவமனைகள் திறக்கப்பட வேண்டும். மருத்துவமனைகள் தயாரானவுடன் அதற்கான பணி நியமனங்கள் நடைபெற்று திறந்துவைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்