< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
பாத்திரக்கடையில் பணம் திருட்டு
|14 Aug 2023 5:09 PM IST
கீழ்பென்னாத்தூர் அருகே பாத்திரக்கடையில் பணம் திருடி சென்றுள்ளனர்.
அவலூர்பேட்டையை சேர்ந்தவர் அக்பர். இவர் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள சிறுநாத்தூர் பகுதியில் பாத்திரக்கடை வைத்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தார்.
அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.8 ஆயிரத்து 150-ஐ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அக்பர் கொடுத்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.