< Back
மாநில செய்திகள்
நர்சிடம் தங்கச்சங்கிலி திருட்டு
கரூர்
மாநில செய்திகள்

நர்சிடம் தங்கச்சங்கிலி திருட்டு

தினத்தந்தி
|
30 Dec 2022 1:40 AM IST

நர்சிடம் தங்கச்சங்கிலி திருடப்பட்டுள்ளது.

குளித்தலை அருகே உள்ள நடுவதியம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் மாலினி (வயது 22). இவர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்புமுள்ள குடிநீர் குழாயில் முகம் கழுவி கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது தான் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அருகில் கழற்றி வைத்துள்ளார். இந்தநிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடந்து வந்து முகம் கழுவிக் கொண்டிருந்த அப்பெண்ணிடம் ஒருவருடைய முகவரி கேட்டு விசாரித்துள்ளார். அப்போது மாலினி தனது அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு சொல்வதாக கூறி அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது முகவரி கேட்ட நபர் அங்கு இல்லை, அதுபோல குடிநீர் குழாய் அருகே அவர் கழட்டி வைத்திருந்த தங்கச்சங்கிலி காணாமல் போய் உள்ளது. இதுகுறித்து மாலினி குளித்தலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தங்கச்சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்