காஞ்சிபுரம்
சூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளரை திசை திருப்பி பணம் திருட்டு
|சூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளரை திசை திருப்பி பணம் திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
காஞ்சீபுரத்தில் 5 கிளைகளுடன் பிரபலமான தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு காலி பிளாஸ்டிக் கவரை வைத்துகொண்டு பொதுமக்களிடம் சட்டை பாக்கெட்டில் உள்ள விலையுயர்ந்த செல்போன் திருடுவது, சூப்பர் மார்கெட்டில் உள்ள பொருட்களை பெண்கள் லாவகமாக உடையில் மறைத்து திருடுவது என கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் சின்ன காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளரின் கார் டிரைவரான ரமேஷ் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்த கவுண்ட்டரில் நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் தனியாக வந்து கையில் வைத்திருந்த காலி பிளாஸ்டிக் கவரை அவர் மீது வைத்து வாடிக்கையாளரை திசை திருப்பி லாவகமாக பாக்கெட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்து 500-ஐ திருடி சென்று விட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.