< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
|16 Jun 2022 11:28 PM IST
தேனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது
தேனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முகமது ஆசிக் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக்அலி, மாவட்ட அமைப்பு செயலாளர் சையது காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அக்கிம் ராஜா நன்றி கூறினார். கூட்டத்தில், மாவட்டத்தில் சிறு, குறு தொழில் செய்யும் வியாபாரிகளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வழிவகை செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.