< Back
மாநில செய்திகள்
திருமாவளவன் மீதான வழக்கின் நிலை குறித்து அறிக்கை: போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

திருமாவளவன் மீதான வழக்கின் நிலை குறித்து அறிக்கை: போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
14 Jan 2023 12:11 AM IST

2011-ம் ஆண்டு திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேளச்சேரி போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

வேளச்சேரியில் உள்ள புதிய வீட்டுக்கு கடந்த 2011-ம் ஆண்டு மே 28-ந்தேதி என் மனைவி, 3 மகள்களுடன் சென்றேன். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு தொல்.திருமாவளவன் வந்திருப்பதாக கேள்விப்பட்டு அங்கு நாங்கள் சென்றோம்.

ஆனால் அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் வீரப்பன் எங்களை உள்ளே வரக்கூடாது என்று தடுத்தார். திருமாவளவனும் வெளியில் வந்து, 'இங்கிருந்து போங்கள், பின்னர் உங்களை பார்க்கிறேன்' என்று கூறினார்.

இதையடுத்து, எங்கள் வீட்டுக்கு சென்றோம். வீட்டுக்கு முன்பு காரை நிறுத்தி நாங்கள் நின்றபோது, 10 பேருடன் வந்த வீரப்பன் எங்களை தாக்கினார். எங்களிடம் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறித்து சென்றுவிட்டனர். இந்த சம்பவத்துக்கு காரணம் தொல்.திருமாவளவன்தான்.

அரசியல் செல்வாக்கு

இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தேன். போலீசார் திருட்டு, கொலை முயற்சி, பெண்களை தாக்குதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வீரப்பன், திருமாவளவன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், இந்த வழக்கு வேளச்சேரி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. திருமாவளவன் அரசியல் செல்வாக்குமிக்கவர் என்பதால், 11 ஆண்டுகள் கடந்த பின்னரும், புலன்விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் போலீசார் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

அவகாசம்

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வக்கீல் ராஜ் திலக், 'இந்த வழக்கு புலன் விசாரணைக்காக நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் என்ன நடந்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்' என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்