< Back
மாநில செய்திகள்
தஞ்சை கோவிலில் திருட்டு போன சிலை அமெரிக்காவில் ஏலம் - அதிர்ச்சி தகவல்...!
மாநில செய்திகள்

தஞ்சை கோவிலில் திருட்டு போன சிலை அமெரிக்காவில் ஏலம் - அதிர்ச்சி தகவல்...!

தினத்தந்தி
|
22 Sept 2022 7:36 PM IST

தஞ்சை கோவிலில் திருட்டு போன சிலை அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டுள்ளது. சிலையை தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை,

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள முத்தம்மாள்புரம் கிராமத்தில் ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலில் உள்ள பழமையான கலச சம்ஹார மூர்த்தி என்ற திரிபுராந்தக மூர்த்தி வெண்கல சிலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போய் விட்டது.இந்த சிலைக்கு பதிலாக போலியான சிலை ஒன்று கோவிலில் வைக்கப்பட்டு விட்டது.

இருந்தாலும் பழமையான கலச சம்ஹார மூர்த்தி சிலை திருடப்பட்டது குறித்து புகார் கொடுக்கப்பட்டு,கடந்த 2020 ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பே £லீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேற்படி திருட்டு போன கலச சம்ஹாரமூர்த்தியின் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டீஸ் டாட் காம் இணையதளத்தில் மேற்கண்ட சிலையின் படம் வெளியாகி இரு ந்தது.மேலும் அந்த சிலை ஏலம் விடப்பட்டதாக தெரிய வந்துள்ளது.அதன் விலை 43 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் என்றும், மேற்படி இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சிலைக்கான உரிய ஆவணங்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும்,சிலையை தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்