< Back
மாநில செய்திகள்
குளச்சலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை - நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
மாநில செய்திகள்

குளச்சலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை - நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்

தினத்தந்தி
|
29 July 2022 7:15 PM IST

குளச்சலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது தொடர்பாக நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குளச்சல்,

குமரி மாவட்டம் குளச்சல் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், ஆணையர் (பொறுப்பு)ஜீவா, மேலாளர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கடந்த மாதம் 1-ம் தேதி அவசரக்கூட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்ட பொருள் மற்றும் 27-ம் தேதி சாதாரணக்கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொருள்கள் வாசிக்கப்பட்டது.

குளச்சல் நகர்மன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது உள்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்