< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
தர்மபுரி மாவட்டம் உருவான நாளையொட்டிஅதியமான், அவ்வையார் சிலைகளுக்கு போலீசார் மரியாதை
|3 Oct 2023 12:30 AM IST
சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி பிரிக்கப்பட்டு கடந்த 1965-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந் தேதி தர்மபுரி மாவட்டம் உருவான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று 59-வது ஆண்டு தர்மபுரி மாவட்டம் உருவான நாள் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டது. தர்மபுரி 4 ரோடு ரவுண்டானாவில் அமைந்துள்ள வள்ளல் அதியமான், அவ்வையார் உருவ சிலைகளுக்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் போலீசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சின்னசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.