< Back
மாநில செய்திகள்
மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
தர்மபுரி
மாநில செய்திகள்

மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
20 April 2023 12:15 AM IST

பாலக்கோட்டில் மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பழனியப்பன் பரிசு வழங்கினார்.

பாலக்கோடு

பாலக்கோடு திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்தும் பல்வேறு அணிகள் பங்கேற்றன. இதில் பெண்கள் பிரிவில் சேலம் ஏ.என்.மங்களம் அணி முதலிடத்தையும், ஓசூர் ஈகிள் அணி 2-ம் இடத்தையும், நாகப்பட்டினம் அணி 3-ம் இடத்தையும் பெற்றன. ஆண்கள் பிரிவில் திருச்சி போலீஸ் அணி முதலிடத்தையும், கோவை அணி 2-ம் இடத்தையும், சேலம் ஏ.வி.எஸ். அணி 3-ம் இடத்தையும் பெற்றன. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை தாங்கினார். தர்மபுரி தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் மணி, பொருளாளர் முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மூத்த வக்கீல் சந்திரசேகர், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துனை அமைப்பாளர் ரவி, டாக்டர் ஆனந்த், நிர்வாகிகள் மோகன், பெரியசாமி, ஜெயந்திமோகன், சக்திவேல், ஆனந்தன், குமார், பேரூராட்சி துணைத்தலைவர் இதயத்துல்லா, பேரூர் அவைத்தலைவர் அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்