< Back
மாநில செய்திகள்
மாநில போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி: டி.ஜி.பி. சைலேந்திரபாபு சாம்பியன் பட்டம் வென்று சாதனை
மாநில செய்திகள்

மாநில போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி: டி.ஜி.பி. சைலேந்திரபாபு சாம்பியன் பட்டம் வென்று சாதனை

தினத்தந்தி
|
10 Sept 2022 7:40 PM IST

மாநில போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

சென்னை,

மாநில அளவிலான போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு ம வட்டம், ஒத்திவாக்கத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது. காவல்துறையில் உள்ள 8 அணிகள் சார்பில் 220 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று ஆயுதப்படை அணியினர் முதல் இடத்தை பிடித்தனர். 2வது இடத்தை தலைமையிட அணியும், 3வது இடத்தை சென்னை போலீஸ் அணியும் பெற்றது.

உயர் அதிகாரிகளுக்கான போட்டியில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். அவர் கலந்து கொண்ட பே ட்டிகளில் 2 தங்க பதக்கங்களையும், ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றர். 2வது இடத்தை முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு சூப்பிரண்டு திருந வுக்கரசு பெற்றார். 3வது இடத்தை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பிடித்தார்.

வெற்றிபெற்றவர்களுக்கு டி.ஜி.பி.சைலேந்திரபாபு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக போலீஸ் அணி சார்பில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்