< Back
மாநில செய்திகள்
மாநில அளவில் யோகா போட்டி
திருவாரூர்
மாநில செய்திகள்

மாநில அளவில் யோகா போட்டி

தினத்தந்தி
|
2 Oct 2023 12:15 AM IST

திருவாரூரில் மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது.

கொரடாச்சேரி:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாநில அளவிலான யோகா போட்டி திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக்பள்ளியில் நடந்தது. 'பீட் ஆப் பயர்' அகாடமி நடத்திய சோழ தேச கோப்பை யோகா போட்டியில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கு தாட்கோ தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். திருவாரூர் நகரமன்ற உறுப்பினர்கள் ரஜினிசின்னா, வரதராஜன் கலந்துகொண்டனர். கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரா முருகப்பன் வரவேற்றார்.

மேலும் செய்திகள்