< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான கைப்பந்து: திருச்சி ஜமால்முகமது கல்லூரி சாம்பியன்
திருச்சி
மாநில செய்திகள்

மாநில அளவிலான கைப்பந்து: திருச்சி ஜமால்முகமது கல்லூரி சாம்பியன்

தினத்தந்தி
|
23 Sept 2023 1:34 AM IST

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் திருச்சி ஜமால்முகமது கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கைப்பந்து போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்தது. மதர்தெரசா கோப்பைக்கான இந்த போட்டி, லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 8 கல்லூரி அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நேற்று மாலை நடந்த இறுதி போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியும், சேலம் சக்தி கைலாஷ் கல்லூரி அணியும் மோதின. இதில் ஜமால்முகமது கல்லூரி அணி 25-18, 29-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான போட்டியில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணி 25-21, 25-22 என்ற செட் கணக்கில் நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அணியை தோற்கடித்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ஜமால் முகமது கல்லூரி செயலர் காஜாநஜிமுதீன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன், பொருளாளர் ஜமால்முகமது, கவுரவ இயக்குனர் அப்துல்காதர் நிகால், துணை முதல்வர் ஜார்ஜ்அமலரத்தினம், உடற்கல்வி இயக்குனர் ஷாயின்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்