< Back
மாநில செய்திகள்
பார்வையற்றோருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி
கடலூர்
மாநில செய்திகள்

பார்வையற்றோருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி

தினத்தந்தி
|
12 Jun 2022 1:41 AM IST

கடலூாில் பார்வையற்றோருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. இதில் சென்னை அணி முதல் பாிசை வென்றது.

கடலூர்

பார்வையற்றோருக்கான மாநில அளவிலான 5-வது கைப்பந்து போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு லைப் ஹெல்ப் மோட்டிவேஷன் டிரஸ்ட் தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் முரளி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. முடிவில் சென்னை அணி முதல் பாிசை வென்றது. மேலும் காஞ்சீபுரம் 2-வது இடத்தையும், கள்ளக்குறிச்சி அணி 3-வது இடத்தையும் பிடித்தது. நிகழ்ச்சியில் கே.எஸ். வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் சுபா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, வாலிபால் பயிற்சியாளர் தியாகராஜன், பார்வையற்றோர் சங்கம் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்