திருச்சி
மாநில அளவிலான வாலிபால் போட்டி
|மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. லீக் முறையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், ஆண்கள் பிரிவில் ஜமால் முகமது கல்லூரி அணி முதல் இடமும், தமிழ்நாடு காவல்துறை அணி 2-வது இடத்தையும் பிடித்தது. அதேபோல் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை அணி முதல் இடமும், ஜமால் முகமது கல்லூரி அணி 2-வது இடத்தையும் பிடித்தது. இந்த அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
பின்னர் தயாநிதி மாறன் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், 2024-ல் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்ற உடன் நீட் தேர்விற்கு விதி விலக்கை கொண்டு வருவோம், என்றார். இந்த நிகழ்ச்சியில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., மாநகர தி.மு.க. செயலாளர் மதிவாணன், மாவட்ட மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.