< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: புதுக்கோட்டை போலீசார் சாதனை
|24 Sept 2022 12:57 AM IST
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் புதுக்கோட்டை போலீசார் சாதனை படைத்தனர்.
சென்னையில் சமீபத்தில் மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி மத்திய மண்டலம் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட போலீசார் கலந்து கொண்டனர். இதில் புதுக்கோட்டை ஆயுதப்படையை சேர்ந்த போலீஸ்காரர் சுந்தரலிங்கம் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கமும், டவுன் போலீஸ் நிலைய ஏட்டு ராஜாராம் பிஸ்டல் பிரிவில் வெண்கல பதக்கமும், வெள்ளனூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் ரஞ்சித்குமார் 200 யார்ட்ஸ் பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்று திருச்சி மத்திய மண்டலம் சார்பாக மாநில அளவில் 2-ம் இடம் பெற்றனர். இதையடுத்து, துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த போலீஸ்காரர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.