< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நிர்ணயம் - அரசாணை வெளியீடு
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நிர்ணயம் - அரசாணை வெளியீடு

தினத்தந்தி
|
3 Oct 2024 7:54 AM IST

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

ஆதிதிராவிடர் நலத்துறை சார்நிலை பணியில் சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து, அத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகளை ஒரே அலகின்கீழ் கொண்டுவருமாறு அரசுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் கருத்துரு அனுப்பி இருந்தார்.

அந்த கருத்துருவை ஏற்று ஆதி திராவிடர் நலத்துறை சார்நிலை பணி சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஜி.லட்சுமி பிரியா அரசாணையாக வெளியிட்டுள்ளார்.அரசாணையில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகள் ஒரே அலகின்கீழ் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட பதவிகளுக்கு பணிநியமன நாள் அடிப்படையில் மாநில அளவிலான பணிமூப்பு (சீனியாரிட்டி) தயாரிக்குமாறு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனருக்கும் அரசாணையில் அறுவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்