< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம்

தினத்தந்தி
|
8 Oct 2023 3:45 AM IST

கோவையில் மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவை

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் தனியார் தொழில்நுட்ப அருங்காட்சியகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம் கோவை கொடிசியா அருகே மண்டல அறிவியல் மையத்தில் நேற்று நடந்தது. சிறுதானியங்களின் சிறப்பு என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை தாங்கினார்.

இதில் கோவை மண்டல அறிவியல் மைய பொறுப்பு அலுவலர் வள்ளி சிறப்புரையாற்றினார். இதில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன. முடிவில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்