< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான ஆணழகன் போட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாநில அளவிலான ஆணழகன் போட்டி

தினத்தந்தி
|
16 Aug 2023 11:21 PM IST

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் நாமக்கல்லை சேர்ந்தவர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றார்.

புதுக்கோட்டையில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடல் எடையை அடிப்படையாக கொண்டு 16 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் ஆணழகனர்கள் தங்களது கட்டுமஸ்தான உடலை காட்டி பார்வையாளர்களை வியக்க வைத்தனர்.

ஒட்டுமொத்தமாக மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை நாமக்கல்லை சேர்ந்த சரவணன் தட்டிச்சென்றார். அவருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 2-வது இடத்தை சென்னையை சேர்ந்த ஆன்ட்ரேஷனும், 3-வது இடத்தை சென்னையை சேர்ந்த பாண்டியனும் பிடித்தனர். இதில் 2-வது பரிசு ரூ.1 லட்சமும், 3-வது பரிசு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டன. பரிசுகளை தொழில்அதிபர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கத்தினர் செய்திருந்தனர். இதேபோல பெண்களுக்கான போட்டியில் புதுக்கோட்டை, திருவண்ணாமலையை சேர்ந்த 2 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்