< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
மாநில அளவிலான கராத்தே போட்டி
|12 Dec 2022 12:05 AM IST
அரியலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளி மற்றும் அராசிடோ இசின்ரியு கராத்தே சார்பில் 3-ம் ஆண்டு மாநில அளவிலான கராத்தே போட்டி அரியலூரில் உள்ள கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை, தூத்துக்குடி, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, நெல்லை, பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இருந்து 1,200 சிறுவர்-சிறுமிகள் பங்கேற்றனர். போட்டிகள் வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சிறுவர்களுக்கு தனியாகவும், சிறுமிகளுக்கு தனியாகவும் நடைபெற்றது.
போட்டிகள் கட்டா, குமித்தே ஆகிய முறையில் நடைபெற்றது. இதில் முதலில் 4 இடம் பிடித்தோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கராத்தே போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கும்பகோணம் அணியினர் தட்டி சென்றனர்.