< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான கராத்தே போட்டி: கரூர் மாணவி 2-வது இடம் பெற்று சாதனை
கரூர்
மாநில செய்திகள்

மாநில அளவிலான கராத்தே போட்டி: கரூர் மாணவி 2-வது இடம் பெற்று சாதனை

தினத்தந்தி
|
25 Oct 2023 12:32 AM IST

மாநில அளவிலான கராத்தே போட்டியில் கரூர் மாணவி 2-வது இடம் பெற்று சாதனை புரிந்தார்.

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் சென்னையில் 40-வது மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டத்தின் சார்பில் யுகி ஷிட்டோ-ரியூ கராத்தே மாணவி மணிமொழி 16, 17 வயதுக்குட்பட்ட ஜூனியர் பிரிவில் 59 கிலோ எடை கொண்ட பிரிவில் கலந்து ெகாண்டு விளையாடினார். இந்த போட்டியில் மணிமொழி 2-வது இடம் பிடித்து கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். பின்னர் அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவியை தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் டெக்னிக்கல் டிரைக்டர் தாய் சென்சாய் ராஜசேகரன் மற்றும் கரூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் செயலாளர் ரென்சி செந்தில்குமார் மற்றும் சீனியர் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்