< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான கபடி போட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாநில அளவிலான கபடி போட்டி

தினத்தந்தி
|
4 April 2023 12:35 AM IST

மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளையொட்டி மாநில அளவிலான கபடி போட்டி கந்தர்வகோட்டையில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 35 அணிகள் கலந்து கொண்டன. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில் கோமாபுரம் அணியும், தமிழ்நாடு காவல் துறை அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதையடுத்து நடைபெற்ற இறுதி போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு காவல் துறை அணியினர் 35-22 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற 4 அணிகளுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. முடிவில் தி.மு.க. நகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்