< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மாநில அளவிலான கபடி போட்டி
|10 Oct 2022 12:22 AM IST
கந்தர்வகோட்டை அருகே மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
கந்தர்வகோட்டை அருகே உள்ள அரவம்பட்டி கிராமத்தில் "புரோ" கபடி போட்டி தொடக்க விழாவையொட்டி மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 95 அணிகள் கலந்து கொண்டன. பகல்-இரவாக நடைபெற்ற இந்த போட்டியில் கந்தர்வகோட்டை அணியினரும், சேலம் அணியினரும் இறுதி போட்டியில் மோதினர். இதில், சேலம் அணியினர் முதல் பரிசை தட்டி சென்றனர். கந்தர்வகோட்டை அணியினர் 2-வது இடத்தையும், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அணியினர் 3-வது இடத்தையும், ராஜபாளையம் அணியினர் 4-வது இடத்தையும் பிடித்தனர். பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன. கபடி போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.