< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மாநில அளவிலான கபடி போட்டி
|12 Sept 2023 12:40 AM IST
மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
ஆலங்குடி அருகே நெம்மகோட்டை பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடின. பா.ஜ.க. சிறுபான்மையின மாவட்ட பார்வையாளர் அரசு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வந்தது. இதில் நண்பன் ராஜேஷ் வீரகுடி நாடு அணி முதல் பரிசும், செந்தில் ஆனந்த குமார் நினைவு அணி 2-வது பரிசும், நிலவைப்பட்டி ஓம் விநாயகா அணி 3-வது பரிசும், சத்யகலா நினைவு வேங்கிடகுளம் அணி 4-வது பரிசும் பெற்றனர். பின்னர் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது. இந்த போட்டியினை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கபடி ரசிகர்களும், பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.