< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான கோ-கோ போட்டி
கரூர்
மாநில செய்திகள்

மாநில அளவிலான கோ-கோ போட்டி

தினத்தந்தி
|
8 Oct 2023 11:54 PM IST

மாநில அளவிலான கோ-கோ போட்டி நடந்தது.

நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கோ-கோ போட்டி நடைபெற்றது. இதனை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்.

போட்டியில் சென்னை, வேலூர், கடலூர், சேலம், கோவை, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய 8 மண்டலங்களில் இருந்து வந்த 72 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். இதில் வெற்றி பெற்ற 12 பேரும் மராட்டியத்தில் நடைபெறும் தேசிய அளவிலான கோ-கோ போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில், நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்